Select Your Image to Compress

TNPSC INSTRUCTIONS FOR PHOTO NAME AND DATE:
TNPSC PHOTO COMPRESSOR AND ADD PHOTO NAME AND DATE ➨ Click Here
TNPSC SIGNATURE COMPRESSOR ➨ Click Here
புகைப்படத்தின் பெயர் மற்றும் தேதிக்கான TNPSC வழிமுறைகள்:

  • தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட அன்றோ, அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையவழியில் ஒவ்வொருமுறை விண்ணப்பிக்கும்போதும் விண்ணப்பதாரர் பதிவேற்றம் வேண்டும்.
Applicants shall upload their photograph taken on or after the date of notification at the time of submission of each and every online application.
  • விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பத்தில் கடவுச்சீட்டுக்குரிய அளவிலான (உயரம் 4.5 செ.மீ. மற்றும் அகலம் 3.5 செ.மீ.) வெள்ளைப் பின்னணியில், முகம் மற்றும் இரண்டு காதுகளும், கழுத்துப்பகுதியும் தெளிவாகத் தெரியுமாறு சரியான அளவு (Correct Size) மற்றும் சரியான வடிவத்திலான (Correct Format) புகைப்பட ஸ்டூடியோவில் (Photo Studio) எடுக்கப்பட்ட வண்ணப் புகைப்படத்தினை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • புகைப்படத்தின் கீழே விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி தெரியுமாறு அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
  • புகைப்படத்தின் 4.5 செ.மீ. மொத்த உயரத்தில், விண்ணப்பதாரரின் படம் 3.0 செ.மீ. ஆகவும், விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி ஆகிய தகவல் 1.5 செ.மீ. ஆகவும் இருக்க வேண்டும்.
* The photograph should be in color, of passport size, against a white background and taken in a photo studio.
* The applicant should be photographed in frontal view showing both ears and part of the neck.
* The applicant should ensure that the name of the applicant and the date of photography (i.e., on or after the date of notification) are printed at the bottom of the photograph.
* The face of the applicant as well as his name and date of photography should be clearly visible in the photograph of height 4.5 cm and width 3.5 cm. Of the total height of the photograph, the image of the applicant shall be 3.0 cm and the applicant's name and date of photography shall be 1.5 cm, as illustrated above.


TNPSC Official Format Photo
tnpsc photo


TNPSC ONE TIME REGISTRATION PHOTO AND SIGNATURE SIZE
TNPSC OTR INSTRUCTIONS FOR PHOTO FILE SIZE AND SIGNATURE FILE SIZE:
புகைப்படக் கோப்பு அளவு மற்றும் கையொப்பக் கோப்பு அளவுக்கான TNPSC OTR வழிமுறைகள்:

  • ஒருமுறைப்பதிவின்போது,விண்ணப்பதாரர் மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தினை ஸ்கேன் செய்து,20KB - 50KB அளவில் Photograph.jpg' என்றும், கையொப்பத்தினை 10KB - 20KB அளவில் Signature.jpg' என்றும் CD / DVD / pen drive போன்ற ஏதேனும் ஒன்றில் 200 DPI என்ற அளவில் ஒளிச்செறிவு இருக்குமாறு சேமித்து, பதிவேற்றம் செய்வதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • டிஜிட்டல் வடிவிலான புகைப்படம் இல்லையெனில், புகைப்படத்தின் கீழே விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி அச்சிடப்பட்ட கடவுச்சீட்டுக்குரிய (Passport Size) அகலம் 3.5 செ.மீ மற்றும் உயரம் 4.5 செ.மீ அளவிலான புகைப்படத்தினை ஒரு வெள்ளைத்தாளில் ஒட்டி, அத்தாளினை 200 DPI ஒளிச்செறிவு என்ற அளவில் ஸ்கேன் செய்து புகைப்படத்தை மட்டும் CROP செய்து 20 KB - 50 KB என்ற அளவில் "Photograph.jpg" என சேமித்து, அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • புகைப்படம் ஒட்டப்பட்ட முழுத்தாளினையும் பதிவேற்றம் செய்யக்கூடாது. சுயமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்(Selfie), கைப்பேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,நகலெடுக்கப்பட்ட(Xerox) புகைப்படங்கள், குடும்ப விழாக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மரம், செடி, கொடி,கட்டடங்கள் போன்ற பின்னணியைக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எவற்றையும் பதிவேற்றம் செய்யக்கூடாது.
  • விண்ணப்பதாரரின் புகைப்படமின்றி வேறு இயற்கைக்காட்சிகள், விலங்குகள், கட்டடங்கள் போன்ற புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யக்கூடாது. இவ்வறிவுரைகளை மீறி, பொருத்தமற்ற புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் விண்ணப்பதாரரின் இணையவழி விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.
* If the photograph is not available in a digital format, a passport size photograph showing the image of the applicant along with the name of the applicant and the date of photography printed at the bottom, in the same dimensions as specified above, may be pasted on a plain white paper and scanned to obtain a resolution of 200 DPI.
* The image should then be cropped to show only the photograph of size 20 KB-50KB and saved as `Photograph.jpg' and uploaded.
* The entire sheet of white paper on which the photograph is pasted should not be uploaded.
* Photographs taken using cellular phones, selfies, photocopies (Xerox) of photographs, photographs taken during family functions, at tourist places or against a backdrop of plants or buildings should not be uploaded.
* Photographs of nature, wildlife, buildings, etc. shall not be uploaded.
* In case of uploading an inappropriate photograph, in violation of the aforementioned instruction, the application is liable to be rejected after due process.

TNPSC INSTRUCTIONS FOR SIGNATURE FILE SIZE:

  • கையொப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு முன்பு, விண்ணப்பதாரர் ஒரு வெள்ளைத்தாளில் அகலம் 6 செ.மீ., உயரம் 2 செ.மீ. கொண்ட கட்டம் வரைந்து, அதில் நீலம் அல்லது கருப்பு நிற மை பேனாவைப் பயன்படுத்தி கையொப்பமிட வேண்டும்.
  • கையொப்பமிட்ட வெள்ளைத் தாளினை 200 DPI என்ற ஒளிச்செறிவில் ஸ்கேன் செய்து 10KB- 20KB என்ற அளவில் "Signature.jpg" என சேமித்து அதனைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Prior to uploading of signature, the applicant shall draw a box of dimension 6.0 x 2.0 cm on a white paper and sign within the box,using blue or black ink pen. The paper should then be scanned to obtain a resolution of 200 DPI. The image should then be cropped to show only the box with the signature, of size 10 KB -20KB and saved as `Signature.jpg' and uploaded.

  • விண்ணப்பதாரரின் தெளிவான புகைப்படம் மற்றும் கையொப்பம் உரிய அளவு மற்றும் வடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்யப்படாமலோ / பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் மற்றும் கையொப்பம் தெளிவாக இல்லாமலோ இருப்பின் இணையவழி விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் நிராகரிக்கப்படும்.
Clear images of the photograph and the signature should be uploaded in the correct dimensions, size and format. Failure to upload / upload clear images of the photograph and signature will result in rejection of online application after due process.
  • இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பின்னர், விண்ணப்பதாரர் தமது புகைப்படம் மற்றும் கையொப்பத்தினை மாற்ற இயலாது என்பதால், மிகுந்த கவனத்துடன் அவற்றினை பதிவேற்றம் செய்யுமாறு எச்சரிக்கப்படுகிறார். இணையவழியில் விண்ணப்பித்த பிறகு, இது தொடர்பான எவ்வித கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Applicants are warned that they shall not be permitted to change their photograph and signature once the online application has been submitted. Hence, utmost care and caution should be exercised while uploading these. No request in this regard will be entertained.